ஆல் ஏரியா நம்ம தா…விடாமல் துரத்தும் விடாமுயற்சி…டீசரில் புது சாதனை !
Author: Selvan29 November 2024, 2:30 pm
விடாமுயற்சி டீஸர் சாதனை
நடிகர் அஜித் தரிசனத்தை காண ரசிகர்கள் தவமா தவமிருந்து கொண்டிருக்கும் நேரத்தில்,நேற்று மாலை அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
இரவு 11.08 க்கு டீஸர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில்,உலகம் முழுவதும் இருக்கும் அஜித் ரசிகர்கள் தூங்காமல் காத்து கொண்டிருந்தனர்.
படக்குழு அறிவித்தபடி,இரவு 11.08 மணிக்கு அஜித்தின் விடாமுயற்சி டீஸர் வெளியாகி சோசியல் மீடியாவை திணறடித்தது.
இதையும் படியுங்க: ஓடியாங்க ஓடியாங்க அமரன் OTT அறிவிச்சாச்சு… எவ்ளோ கோடினு தெரியுமா..?
இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி விடாமுயற்சி டீஸர் யூடியூப்பில் 4 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங் NO 1-ல் உள்ளது.
டீசரில் அஜித் எந்த ஒரு வசனமும் பேசாமல் மாஸாக வரும் காட்சிகள் ரசிகர்களை பரவசப்படுத்தியது.
பொங்கல் வெளியீடு
இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்த வருடம் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களுக்கும் தல பொங்கலாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.