“உங்க அப்பா அம்மாவை விட நீ பெரிய குடிகாரன இருப்ப போல” வைரலாகும் பாலாஜி முருகதாஸின் வீடியோ !

Author: Poorni
12 October 2020, 9:30 am
Quick Share

ஆயிரம் சொன்னாலும் மூன்று சீசனை விட இந்த சீசன் தான் அற்புதமாக இருக்கு. புரியலையா ? பிக்பாஸ்ஸதான் சொல்றேன் பாஸ். பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சொந்த சோக கதையை கூறும் போது, அவர் தனது அப்பா அம்மா பாசத்திற்காக ஏங்கியதாகவும், ஆனால் அப்பா அம்மா இருவருமே தன்னை கவனிக்கவில்லை என்றும் இருவருமே குடிகாரர்கள் என்றும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவார்கள் என்றும் கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல், ஒரு குழந்தையை பெற்று நல்லபடியாக வளர்க்க தெரியாதவர்கள் அந்த குழந்தை பெத்துக்காதீங்க என்றும் அவர் ஆவேசமாக கேட்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த நிலையில் பாலாஜியின் அப்பா அம்மா குடிகாரர்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் பாலாஜி முருகதாஸ் ஒரு குடிகாரர் என்று தற்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆக பாலாஜி முருகதாசின் சோகமான பேச்சு முற்றிலும் பொய் என்று நெட்டிசன்கள் கருதுகின்றனர். இன்னும் சிலர், “உங்க அப்பா அம்மாவை விட நீ பெரிய குடிகாரன இருப்ப போல” என்று இணையதளத்தில் அவரை Tag செய்தே சொல்கின்றனர்.

Views: - 38

0

0