நடனம் ஆடும் போது டமால்னு விழுந்த வித்யா பாலன்- நல்லா சமாளிக்கிறீங்களே – வீடியோ!

Author:
26 October 2024, 7:31 am

பாலிவுட் சினிமாவில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன். மிகவும் சவாலான தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்துவார்.

vidya balan

அந்தவகையில் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமான ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார்.

இவர் அஜித்திற்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை வித்யா பாலன் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென கால் ஸ்லிப் ஆக்கி கீழே விழுந்துவிட்டார்.

vidya-balan-360-update-news-

ஆனால் விழுந்தது கூட யாருக்கும் தெரியாத அளவுக்கு உடனடியாக அதை சமாளித்து எழுந்து நின்று ஆடும் அவரது திறமையை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அவருடன் நடிகை மாதுரி தீக்ஷித்தும் சேர்ந்து கொண்டு நடனம் ஆடி இருக்கிறார். இதோ இந்த வீடியோ:

  • cooku with comali season 6 contestants list குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!