வாழு இல்ல வாழ விடு..தனுஷை தாக்கிய விக்னேஷ் சிவன்..!

Author: Selvan
16 November 2024, 2:03 pm

நயன்தாராவின் Beyond the Fairytale ஆவணப்படம் நவம்பர் 18 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ஏற்கனவே நானும் ரவுடி தான் பட ஷூட்டிங் போது தான் விக்னேஷ் மீது எனக்கு காதல் ஆசை வந்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பார்.

அது மக்கள் இடையே வைராலகிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் தனுஷ் நயன்தாராக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

அதில் நயன்தாரா என்னை கேக்காமல் நான் தயாரித்த “நானும் ரவுடி தான்” பட ஷூட்டிங் வீடீயோவை பயன்படுத்தியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.அந்த 3 வினாடி வீடியோவில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஜாலியாக பேசி கொண்டிருப்பது போல் இருக்கும்

தற்போது தனுஷின் 10 கோடி நஷ்ட ஈடு நோட்டீசை பார்த்து கோபம் அடைந்த விக்னேஷ் சிவன் அவருடைய சமூக வளைத்தலத்தில் தனுஷின் வாழு வாழ விடு என்று ஒரு மேடை பேச்சை எடுத்து பதிலடி கொடுத்திருப்பார்.அதுமட்டுமில்லாமல் நயன்தாரா விக்னேஷ் சிவனின் உரையாடலை போட்டு #spread love sir என்று மென்ஷன் பண்ணி இருப்பார் விக்னேஷ் சிவன்.

தனுஷின் இந்த செயலால் நயன்தாரா விக்னேஷ் சிவன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!