‘நினைச்சா தோணும் இடமே’… காத்துகூட போக முடியாத அளவுக்கு நயனை கட்டியணைத்த விக்கி…!!

Author: Babu Lakshmanan
2 July 2022, 10:38 am

கடந்த 7 வருடங்களாக காதலித்து, லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை தங்கும் விடுதியில் திருமணம் கோலகலமாக நடந்து முடிந்தது.

இந்த திருமண விழாவில் மணிரத்னம், ரஜினி, ஷாருக்கான், அட்லீ, போனிகபூர், டிடி, கார்த்தி, விஜய் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் முடிந்தவுடன் இருவரும் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. தற்போது இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

அங்கு எடுக்கும் புகைப்படங்களை கணவர் விக்கி, தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது, அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் வயிறு எரிஞ்சு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?