சமந்தாவுக்கு, நயன்தாரா கொடுத்த Surprise, வைரலாகும் புகைப்படங்கள் !

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 11:18 am
Surprise For Samantha - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. சமந்தா நடித்த ஃபேமிலி மேன் 2 தொடருக்காக சிறந்த நடிகைக்கான விருதை சமீபத்தில் பெற்றுள்ளார். அதை பாராட்டும் வகையில் சமந்தாவிற்கு நயன்தாரா சர்ப்ரைஸாக சூட்டிங் ஸ்பாட்டில் கேக் வாங்கி கொடுத்து அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Views: - 722

42

9