என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே… மொத்த காதலையும் ஒற்றை பதிவில் வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்!

Author: Shree
9 June 2023, 11:13 am
nayanthara
Quick Share

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் 8 ஆண்டுகள் காதலித்தது பின்னர் திருமணம் செய்துக்கொண்டனர். நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வந்த பிறகு தான் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதற்கு அர்த்தமே புரிந்துள்ளது. இந்த தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர். இந்நிலையில் தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடுகிறார்கள் இது குறித்து அழகான பதிவு ஒன்றை இட்டு நயன்தாரா தன் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்கி.

அந்த பதிவில், என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே, இந்த 1 வருடம் ஏற்ற தாழ்வுகள்,எதிர்பாராத பின்னடைவுகள், சோதனை நேரங்கள் என நிறைய தருணங்கள் நினைந்திருந்தது. ஆனால் அபரிமிதமான அன்பும் பாசமும் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்கு வரும்போது மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது. அத்துடன் அன்பு, பாசம் ஆகியவற்றை கொடுத்து ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனாக என்னை மாற்றி மீண்டும் கனவுகள், இலட்சியத்தை நோக்கி தேடுவதற்கு அனைத்து ஆற்றலையும் கொடுத்ததற்கு மனைவி நயன்தாராவுக்கு நன்றி கூறியுள்ளார்.

என் உயிர்கள் மற்றும் உலகங்களுடன் சேர்ந்து அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்கிறேன். என் குடும்பம் கொடுத்த பலம் எல்லாத்தையும் மாற்றுகிறது! சிறந்த மனிதனாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க பாடுபடுவது தான் என்னை போன்றவர்களுக்கு தேவையான ஊக்கம். மற்றும்
அருமையான இந்த புகைப்படத்திற்கு நன்றி என கூறி பதிவிட்டுள்ளார். தனது ஒரு வருட திருமண வாழ்க்கையை குறித்து நெகிழ்ந்து பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Views: - 239

0

0