சினிமாவில் விஜய், அஜித் இடங்கள் காலி ஆகாது : பிரபலம் சொன்ன கருத்து!
Author: Udayachandran RadhaKrishnan1 July 2025, 5:00 pm
திருப்பூரில் அஃகேனம் பட முன்னோட்ட நிகழ்ச்சி. நடிகர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஸ்ரீசக்தி திரையரங்கில் நடைபெற்றது. இதில் அஃகேனம் பட டிரைலர் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் திரையிடப்பட்டது. பின்னர் படக்குழுவினர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் பேசுகையில், குடுத்த காசுக்கு தரமான படமாக இருக்கும். இளம் தலைமுறையை கொண்டு படத்தை உருவாக்கி உள்ளோம். உங்கள் ஆதரவு வேண்டும். முதலில் வரும் 100 பேர் தான் படத்தின் நிலையை முடிவெடுக்கிறார்கள்.
ஊமை விழிகள், இணைந்த கைகள் நாங்கள் செய்ததை போல இவர்கள் ஒரு டீமாக வந்தார்கள் அது எனக்கு பிடித்தது. அரசியலுக்கு ஒரு கும்பிடு. மக்களுக்கு நல்லது செய்பவர்களை ஆதரிப்போம்.
இதையும் படியுங்க: மீண்டும் ரவி மோகனை வம்புக்கு இழுத்த ஆர்த்தி? இன்ஸ்டா ஸ்டோரியால் ஏற்பட்ட சர்ச்சை!
போதை பொருள் பயன்பாடு என்பது சினிமா துறை என இல்லாமல் யார் செய்தாலும் தவறு தான். மூன்று பேரின் கதையை லிங்க் செய்வது இந்த படம் இதற்கு பொருத்தமான பெயராக அஃகேனம் தமிழ் பெயர் இருக்கும்.

இசை முழுவதும் புத்தாபெஸ்ட்ல் பெரிய படம் அளவுக்கு செலவு செய்தே அமைத்துள்ளோம். இளைஞர்களை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும். அதிக திறமைகளை கொண்டுள்ளனர். அதனை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக உள்ளேன். பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆனால் நான் இதை தான் செய்வேன்.
சினிமாவில் பணம் சம்பாதித்து படம் எடுக்காதவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள். பல முயற்சி செய்தவர் அவர் ஆஸ்கர் குழுவில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த படத்தில் ஒரு கன்டென்ட் உள்ளது. அதற்காக படம் ஆகா ஓகோ என சொல்ல மாட்டேன். விஜய் அஜித் என யாருடைய இடமும் காலி ஆகாது. அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பார்கள் அருண் பாண்டியன் கூறியுள்ளார்,.