யாரும் பார்த்திராத விஜயின் Power Rangers கெட்டப்.. இத நாங்க அந்த படத்துல பார்க்கவே இல்லையே..!

Author: Vignesh
15 December 2023, 2:45 pm

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 67 படங்களில் நடித்திருக்கிறார்.

leo vijay

விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார்.

விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில், விஜய் நடிப்பில் தளபதி 68 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் புத்தாண்டு அன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நடிகர் விஜய் மற்றும் ஸ்ரேயா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் அழகிய தமிழ் மகன் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இப்படத்தில் இருந்து அன்சின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகிய இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் மற்றும் ஸ்ரேயா இருவரும் பவர் ரேஞ்சர்ஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு காட்சியை அழகிய தமிழ் மகன் படத்தில் பார்த்ததே இல்லையே என தெரிவித்து வருகிறார்கள்.

Vijay - Updatenews360
  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!