கிளீன் ஷேவ், முரட்டு மீசை! திருமணத்தின்போது விஜய் ஆண்டனி எப்படி இருக்கிறார் பாருங்க!
Author: Prasad18 August 2025, 1:53 pm
இளைஞர்களை கவர்ந்த இசையமைப்பாளர்
2005 ஆம் ஆண்டு வெளிவந்த “சுக்ரன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் விஜய் ஆண்டனி. இவர் இசையமைத்த முதல் திரைப்படத்தின் ஆல்பம் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இளைஞர்களை கவரும் வகையில் பல துள்ளல் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார்.

அதனை தொடர்ந்து “நான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் இவர், தற்போது “சக்தி திருமகன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் திருமண புகைப்படம்!
விஜய் ஆண்டனி 2005 ஆம் ஆண்டு ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு மீரா, லாரா என இரு மகள்கள் உண்டு. கடந்த 2023 ஆம் ஆண்டு இவரது மூத்த மகள் மீரா தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தனது மகளின் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி திருமணம் செய்துகொண்ட போது தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி கிளீன் ஷேவ், முரட்டு மீசையுடன் தென்படுகிறார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
