Phone’லே தாலி கட்டிட்டேன் – விஜய் ஆண்டனியின் ஸ்வாரஸ்யமான Love Story  – வீடியோ!

Author: Shree
31 May 2023, 12:06 pm

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.

இவர் தமிழில் நான், சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, கோடியில் ஒருவன். திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதுவரை ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சினிமாவில் எந்த ஒரு போட்டியும், பொறாமைகளும் இன்றி இருப்பவர் விஜய் ஆண்டனி, இந்நிலையில் பிச்சைக்காரன் 2 ப்ரமோஷன் நேர்காணல் ஒன்றில் தனது ஸ்வாரஸ்யமான காதல் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது என் மனைவி சன் டிவியில் ஆங்கராக வேலைபார்த்து வந்தார். சுக்கிரன் படத்தில் நான் இசையமைத்த ” உச்சி முதல்” பாடல் நன்றாக இருக்கிறது என போன் பண்ணி சொன்னாங்க. அப்போதிலிருந்தே எங்குக்குள் காதல் உணவர்வுகள் ஆரம்பித்தது. பின்னர் போனில் பேச ஆரம்பித்தோம். 4வது நாள் அவருக்கு ப்ரபோஸ் செய்துவிட்டு போனில் தாலி கட்டிவிட்டேன் என பல சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். பிச்சைக்காரன் படத்தை அவரது மனைவி பாத்திமா தனது சொந்த தயாரிப்பின் மூலம் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்ஸ் செய்யவும்:

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…