“கொரோனா பணக்காரனை மேலும் பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்”. விஜய் ஆண்டனி வேதனை ட்விட்…

Author: Mari
10 January 2022, 5:54 pm
Quick Share

மாக்கயலா’, ‘நாக்கு முக்க’ என்ற வார்த்தைகளை கேட்ட மக்களுக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும், அந்த பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.
ஒருபுறம் குத்துப் பாடல்களைப்போட்டு ஏறி ஆடவும் வைப்பார். மறுபுறம் ‘அழகாய் பூக்குதே’ என உருகவும் வைப்பார்.

மற்ற இசையமைப்பாளர்களின் எந்த ஒரு சாயலும் இல்லாமல் தனித்துவ இசையை வழங்குவதில் விஜய் ஆண்டனி கில்லாடி. 2012-ல் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானhர். தொடர்ந்து பிச்சைக்காரன், சலீம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்த நிலையில் தற்போது ட்டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது வைரலாகியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் படும் அவலம் குறித்து பதிவிட்டுள்ளார்.

‘இந்த உலகத்தை யாராவது பாம் போட்டு ஒரேடியா அழிச்சுடுங்க’ ‘கொரோனா பணக்காரனை மேலும் பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்’. நடிகர் விஜய் ஆண்டனி வேதனையாக போட்ட ட்விட் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

Views: - 283

9

0