கோடை விடுமுறையில் கோடியில் ஒருவன்!

5 February 2021, 7:58 pm
Quick Share

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், நான் படத்தின் மூலமாகவே ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என்று எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் பிச்சைக்காரன் படம் மட்டுமே விஜய் ஆண்டனியை சிறந்த நடிகராக காட்டியுள்ளது. இந்தப் படத்தின் மூலமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.

இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் கூட அப்போதே உருவாக இருப்பதாக பேசப்பட்டது. தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன் மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ள படம் கோடியில் ஒருவன். ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரச்சனா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இந்தப் படம் எப்போது திரைக்கு வருகிறது என்பது குறித்து விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கோடியில் ஒருவன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிறது. விரைவில் திரையில் சந்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கோடியில் ஒருவன் டீசரையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், எந்த தேதியில் வெளியாகிறது என்பது குறித்து குறிப்பிடவில்லை.
எனினும், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என்பதால், அன்றைய தேதியில் கோடியில் ஒருவன் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல படங்கள் அன்றைய தேதியில் வெளியாக இருக்கிறது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் விஜய ராகவன் என்ற டைட்டிலில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0