அம்மாவிற்காக பிரம்மாண்டமான கோவில் கட்டிய விஜய்.. கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார் போல..!
Author: Vignesh9 ஏப்ரல் 2024, 5:42 மணி
தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.
பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.
மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!
இதில், அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில் லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது.
இதனிடையே, படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் படு வேகமாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு ஸ்பெஷலான தகவல் ஒன்று லீக் ஆனது. இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!
மேலும், இனிவரும் நாட்களுக்கு படம் குறித்த நிறைய அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் பிளான் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.
முன்பே கூறியிருந்தது போல், படப்பிடிப்பு வேலைகள் ஓரளவுக்கு முடிந்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனம் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர். அதன் முதற்படியாக ஆடியோ ரைட்ஸ் வியாபாரம் நடந்துள்ளது. பிரபல டி சீரிஸ் நிறுவனம் விஜயின் 68வது படத்தின் ஆடியோவை 28 கோடி கொடுத்து வாங்கி உள்ளார்களாம். இவர்கள் இதற்கு முன்பு விஜயின் வாரிசு படத்தின் ஆடியோ ரைட்ஸ் 10 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்து, விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69 தான், தன்னுடைய கடைசி படம் என அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு, வந்த சமயத்தில் இருந்தே, யார் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகிறார் என பேச்சு இணையதளத்தில் எழுந்து வருகிறார்.
ஹெச்.வினோத், கார்த்திக் சுப்ராஜ், வெற்றிமாறன், ஆர்.ஜே. பாலாஜி, அட்லீ, தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் என பல இயக்குனர்களின் பெயர் இந்த லிஸ்டில் அடிப்பட்டது. ஆனால், தற்போது 99% சதவீதம் உறுதியாக இயக்குனர் ஹெச்.வினோத் கூறிய கதையை விஜய் ஓகே செய்துவிட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. சமூக அரசியல் சார்ந்த கதைக்களத்தை விஜய்யிடம் தெரிவித்து ஹெச்.வினோத் ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் விஜய் சாய்பாபா கோவிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அவர் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என கூறப்பட்டது. ஆனால், அங்கு கிடையாது விஜய் தனது தாய் சோபாவிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாய்பாபா கோவிலை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சாய்பாபா கோவிலில், கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்துள்ளது. அங்கு விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது. விஜய் கட்டியுள்ள ஸ்ரீ சாய்பாபா மந்திர் கோவிலின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0