ஒரு வேள இருக்குமோ? விஜய் தேவரகொண்டாவுடன் காரில் புறப்படுச் சென்ற ராஷ்மிகா! சிக்கிய வீடியோ…

Author: Prasad
23 June 2025, 5:51 pm

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதல்

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து “கீதா கோவிந்தம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து “டியர் காம்ரேட்” என்ற திரைப்படத்திலும் இணைந்து நடித்திருந்தனர். இந்த இரு திரைப்படங்களை தொடர்ந்து அவர்கள் எந்த திரைப்படங்களிலும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இருவரும் இணைந்து டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. 

vijay deverakonda and rashmika mandanna travel in a same car video viral

இதற்கான சந்தேகத்தை கிளப்பும் விதமாக இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டும் இருந்தன. இந்த நிலையில் தற்போது இந்த சந்தேகத்தை மேலும் கிளப்பும் விதமாக ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. 

இருவரும் ஒரே காரில்?

மும்பை விமான நிலையத்தில் இருந்து இருவரும் முக கவசம் அணிந்தவாறு தனி தனியாக நடந்து வந்தனர். ஆனால் இருவரும் ஒரே காரில் ஏறிச்சென்றனர். இதனை அங்கிருந்த பலர் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா தற்போது “கிங்டம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 4 ஆம் தேதி வெளிவரவுள்ளது. மேலும் ராஷ்மிகா மந்தனா ஹிந்தியில் “தாமா”, “காக்டெயில் 2” ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் எனவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் வருகின்றன. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!