உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்…. சமந்தாவுக்கு நள்ளிரவில் வீடியோ கால் – எல்லைமீறிப்போகும் காதல்!

Author: Shree
28 August 2023, 2:15 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

samantha

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார்.

தொடர்ந்து அவர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திக்கொண்டே குஷி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்த போது விஜய் தேவர்கொண்டாவுடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பு காதலாக மாறியுள்ளதாக கிசு கிசு செய்திகள் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களே நாளுக்கு நாள் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது விஜய் தேவரக்கொண்டா படுக்கையில் இருந்துகொண்டு நள்ளிரவு நேரத்தில் சமந்தாவிற்கு போன் அடித்து,

“உங்களை மிஸ் பண்ணினேன் என்றார் விஜய் தேவரகொண்டா. பின்னர் நான் நாக் நாக் ஜோக் சொல்லப் போகிறேன் என விஜய் தேவரகொண்டா கூற சமந்தாவோ, லாஸ் ஏஞ்சல்ஸில் 1.30 மணி, இந்த நேரத்தில் நாக் நாக் ஜோக் கேட்க விரும்பவில்லை என்றார். ஆனாலும் விஜய் தேவரகொண்டா விடுவதாக இல்லை. இதையடுத்து சரி சொல்லு என்று சமந்தா கேட்க…. விஜய் தேவர்கொண்டா நாக் நாக் என சொன்னார். அது யார் என சமந்தா கேட்க , நா என சொல்லி குஷி படத்தில் வரும் நா ரோஜா நுவ்வே பாடலை பாட ஆரம்பித்தார் விஜய். இந்த வீடியோ இணையத்தில் வெளியிட்டு வித்தியாசமாய் குஷி படத்திற்கு ப்ரோமோஷன் செய்துள்ளனர். அதுக்காக இப்படியா? நடுராத்திரியில் போன் அடித்ததால் நாங்க தப்பா புரிஞ்சிக்கிட்டோம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!