மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! விஜய் தேவரகொண்டாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? அடக்கடவுளே!
Author: Prasad18 July 2025, 3:42 pm
அர்ஜூன் ரெட்டி ஹீரோ…
தெலுங்கில் “நுவ்விலா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் விஜய் தேவரகொண்டா. எனினும் “அர்ஜூன் ரெட்டி” திரைப்படத்தின் மூலமாகத்தான் அவர் தென்னிந்திய அளவில் மிகப் பிரபலமாக அறியப்பட்டார்.
அதனை தொடர்ந்து “கீதா கோவிந்தம்”, “டியர் காம்ரேட்”, “லைகர்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். “நோட்டா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது “கிங்டம்” என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூலை 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா!
“கிங்டம்” வெளியாக இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் இன்று விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அதாவது தீவிர காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கே மருத்துவர்கள் அவரை பரிசோதித்த நிலையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் அவர் ஒரு வார காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் “கிங்டம்” திரைப்படத்தின் புரொமோஷன் பணிகள் பாதிக்கக்கூடும் எனவும் தெரிய வருகிறது.
