6 மணிக்கு மேல விஜய் வெளில வரமாட்டார்; இதுதான் ரகசியம்- வம்பிழுத்த அரசியல் பிரபலம்
Author: Prasad3 May 2025, 11:28 am
தேர்தலை நோக்கி விஜய்
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு நாட்கள் கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு விஜய் தேர்தலை சந்திக்க தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு பக்கம் திமுக, நாதக, பாஜக போன்ற பல கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் விஜய்யை அரசியல் ரீதியாக விமர்சித்து வருவதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது
6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது?
“விஜய்க்கு நான் நேரடியாக சவால் விடுகிறேன். மாலை 6 மணிக்கே மேல் அவரை மாநாட்டில் கலந்துகொள்ளச்சொல்லுங்கள் பார்க்கலாம். தினமும் கூட வேண்டாம். ஒரே ஒரு நாள் மட்டும் செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம். அவரால் அது முடியாது..
ஏனென்றால் 6 மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது. இது சினிமாத்துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். 6 மணிக்கு மேல் அவரால் மது அருந்தாமல் இருக்க முடியாது. 6 மணிக்கு மேல் அவரால் வெளியே வரமுடியாது” என சூர்யா சிவா அப்பேட்டியில் கூறினார். இந்த பேட்டியால் விஜய் ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.