கேப்டன் மறைவால் மனம் உடைந்துபோன விஜய்யின் தந்தை.. எஸ்.ஏ. சந்திரசேகர் பகிர்ந்த இரங்கல் ஆடியோ..!

Author: Vignesh
29 December 2023, 10:13 am

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், அவரது உடலுக்கு பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பல பாஜக தலைவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Kanth

இந்த நிலையில், நேரில் வரமுடியாத பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ் ஏ சந்திரசேகர் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

 vijayakanth  sac

இந்நிலையில், அவர் மறைவுக்கு எஸ் ஏ சந்திரசேகர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சில விஷயத்திற்காக குடும்பத்துடன் துபாய் சென்றுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலானது. விஜயகாந்த் மரணம் பற்றி செய்தி அறிந்து எஸ்ஏ சந்திரசேகர் ஆடியோ கால் மூலம் ஒரு வீடியோவை பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!