திடீரென்று இறந்து போன விஜய் பட இயக்குனர் ! திரையுலகினர் இரங்கல் !
17 September 2020, 8:55 amகில்லி படத்தில் வரும் காமெடி, ஆக்ஷன் என கமர்ஷியல் அம்சங்களுக்கு முக்கிய காரணம் அப்படத்தில் பணியாற்றிய பாபுசிவனுக்கு முக்கிய பங்கு சேரும். அதற்காக விஜய் கொடுத்த பரிசு ” வேட்டைக்காரன் ” விஜய்க்கு பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக அமைந்தது. வேட்டைக்காரன் படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் மாஸ் ஹிட் , அந்த படத்துக்கு Opening கொடுத்த ஒரு முக்கிய காரணம் பாடல்களும் ஒரு முக்கிய காரணம். விஜய் ஆண்டனி இசையில் அனைத்து பாடல்களுமே இன்றளவும் விஜய் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகின்றன. இன்று வரை விஜய் ஆண்டனி அப்படி ஒரு பாடல்கள் கொடுக்கவில்லை என்பது கசப்பான உண்மை.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரான பாபுசிவன், கிட்னி மற்றும் லிவர் ஃபெயிலியர் காரணத்தினால் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 54 ஆகிறது. இவரது திடீர் இறப்பால் திரையுலகம் அதிர்ச்சி கண்டுள்ளது.
இவரின் வேட்டைக்காரன் படம் கலவையான விமர்சனங்களிடையே 2009ம் ஆண்டு வெளிவந்து AVERAGE -ஆக ஓடியது. அதன் பிறகு மீண்டும் விஜயுடன் பைரவா படத்தில் வசனம் பகுதியை கையாண்டார். சண்டக்கோழி 2 படத்தில் இணை இயக்குனராக வேலை பார்த்தார்.