கிடப்பில் போடப்பட்ட விஜய் படம் மீண்டும் ஆரம்பம்? இணைந்த பிரபல இயக்குநர் : வெளியானது சூப்பர் அப்டேட்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 1:31 pm

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் விஜய். ஏராளமான ரசிகர் படைகளை கொண்ட விஜய்யுடன் இணைய ஏராளமான இயக்குநர்கள், தயாரிப்பாளர், நடிகர்கள் காத்துக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை விஜய்யை வைத்து படத்தை இயக்காத கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாக இணைகிறார். ஏற்கனவே யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய்யை வைத்து கௌதம் இயக்க இருந்தார். போட்டோக்கள் எல்லாம் வெளியானது. ஆனால் கடைசியில் அந்த பிராஜக்ட் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படமான ’தளபதி 67 படத்தில் சஞ்சய் தத் கௌதம் மேனன் நிவின் பாலி அர்ஜுன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் படக்குழுவினர் இந்த படத்தில் இன்னும் யார் யார் நடிக்கின்றனர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் கௌதம் மேனன் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் தான் நடிப்பதாகவும் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து தளபதி 67 படத்தில் கௌதம் மேனன் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?