ஒரு மிகப்பெரிய நச்சு வட்டத்தில் விஜய் சிக்கியுள்ளார்-எஸ்.ஏ சந்திரசேகர்

9 November 2020, 5:10 pm
Quick Share

தமிழ் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதையும் ஈர்க்கும் ஒரு பெயர் என்றால் அது தளபதி விஜய் தான். இந்நிலையில் அவரை சுற்றி சில சர்ச்சைகள் அவரது தந்தை மூலமாகவே உருவாக்கப்பட்டு பேசுபொருளாக மாறி இருக்கிறது.

அந்தவகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்த எஸ் ஏ சந்திரசேகர் தற்போது தனது கட்சியில் உள்ள விஜய் எனும்பெயர் தனது மகனை குறிக்காது என்றும் அது வெற்றியை குறிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.

மேலும் தான் 70 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளதாகவும் அதில் 50 திரைப்படங்களுக்கும் மேல் விஜய் என்னும் பெயரையே ஹீரோவிற்கு சூட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் தற்பொழுது ஒரு நச்சு வட்டத்தில் சிக்கி உள்ளதாகவும் அது தனக்கும் அவருக்கும் இடையே ஒரு பிளவினை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். தனது மகன் அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து என்னுடன் இணைவார் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Views: - 21

0

0