விஜய் ஒரு வாத்தி தானே! ஏன் மாஸ்டர்? படத்தோட டைட்டில சொல்ல வச்சிருக்காருப்பா!

13 January 2021, 10:27 pm
Quick Share

மாஸ்டர் படம் முழுவதும் விஜய்யை மாஸ்டர் மாஸ்டர் என்று அனைவருமே அழைக்கிறார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் இன்று 13 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, நாசர், பிரேம் குமார், ஸ்ரீமன், சஞ்சீவ், ரம்யா பாண்டியன், மகேந்திரன், பிரிகிதா, கௌரி கிஷான், விஜே தாரா, சாய் தீனா, ரமேஷ் திலக், தீனா, அழகம் பெருமாள், நாசர், சேட்டன், பூவையார், ரம்யா பாண்டியன், நாகேந்திர பிரசாத், அருண் அலெக்சாண்டர், சிபி புவன சந்திரன், சுனில் ரெட்டி, லல்லு, லின்டு ரோனி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு மாஸ்டர் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. மாஸ்டர் படத்தை இரு பாகங்களாக பிரிக்கலாம். ஒன்று கல்லூரி கதை. இரண்டாவது சிறுவர் சீர்திருத்த பள்ளி கதை (கைதி பட கதை போன்று). கல்லூரியில் பேராசிரியராகவே விஜய் நடித்துள்ளார். அதுவும், ஜான் துரைராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்லூரியில், மாஸ்டர் என்றும், ஜேடி என்றும் அழைக்கின்றனர். கல்லூரியில் இருந்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அதாவது வாத்தி. அவரை ஒன்று சார் என்று அழைக்க வேண்டும், இல்லையென்றால் வாத்தி என்று அழைக்க வேண்டும். அப்படியும் இல்லையென்றால்,

ஜேடி என்று தான் அழைத்திருக்க வேண்டும், ஆனால், படம் முழுவதும், விஜய்யை மாஸ்டர் மாஸ்டர் என்றே அழைக்கின்றனர். அப்படித்தான் மாஸ்டர் டைட்டிலை கடைசி வரை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஒரே ஒரு கட்டத்தில் விஜய்யை அண்ணா என்று அழைத்திருக்க செய்திருக்கிறார். அதுவும், சீர்திருத்த பள்ளியில் உயிரிழக்கும் இரு சிறுவர்கள் விஜய்க்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் விஜய்யை முதலில் மாஸ்டர் என்று அழைக்க பின்னர் அண்ணா என்று குறிப்பிட்டுள்ளனர்.

மாளவிகா மோகனன் சார் என்று அழைக்கிறார்.
இறுதியில், விஜய் சேதுபதி மட்டுமே சரியாக வாத்தி என்றே அழைத்துள்ளார். அர்ஜூன் தாஸ் கூட அவரை மாஸ்டர் என்று அழைக்கிறார். இப்படி படம் முழுவதுமே விஜய் மாஸ்டர் மாஸ்டர் என்று அழைக்கப்படுகிறார்.

Views: - 11

0

0