விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

Author: Prasad
17 June 2025, 7:23 pm

தவெக தலைவர்

கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில் திமுகவை தனது அரசியல் எதிரி எனவும் பாஜகவை தனது கொள்கை எதிரி எனவும் விஜய் குறிப்பிட்டார். மேலும் சமீப மாதங்களாக திமுகவை மிக கடுமையாக விமர்சித்தும் வருகிறார். 

விஜய் பாஜகவை தனது கொள்கை எதிரி என கூறியிருந்தாலும் அவர் திமுகவைதான் அதிகளவில் விமர்சிக்கிறார் என ஒரு தரப்பினர் கூறி வந்தனர். அந்த வகையில் அவர்  பாஜகவின் “B”  team என முத்திரை குத்தி வந்தனர். இதனை தொடர்ந்து சில நாட்களாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் பாஜகவின் B team, விஜய் C team என விமர்சித்து வருகின்றனர். 

விஜய் பாஜகவின் C team ஆ?

இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில் பாஜக எம் எல் ஏவான வானதி சீனிவாசனிடம் “தவெக பாஜகவினுடைய C team என சொல்கிறார்கள்” என கேட்டபோது, சற்று அதிர்ச்சியடைந்த வானதி சீனிவாசன், “C team-ஆ, அப்போ B team யாரு?” என கேட்டார். அதற்கு நிருபர், “சீமானைதான் B team என கூறுகிறார்கள்” என பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், “யார் அரசியல் கட்சித் தொடங்கினாலுமே அவர்களுக்கென்று சில கொள்கைகளோடு வருவார்கள். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? இல்லையா என்பது தேர்தல் முடிவடைந்த பின்பு தெரிய வரும். யாருடைய வாக்குகளின் பங்கு யாரிடம் போகிறது என்பதை பார்த்துதான் அவர்கள் B team ஆ, C team ஆ என்று முடிவெடுக்க வேண்டும். அப்படி இருக்கும்போது விஜய் இன்னும் தேர்தலில் நிற்கவே இல்லையே எப்படி அவரை C team என்று சொல்ல முடியும். ஒரு அனுமானத்திற்கு வேண்டுமென்றால் வைத்துக்கொள்ளலாம்” என்று பதிலளித்தார். இவரின் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!