மாமனார் தாசனாக மாறிய விஜய்.. அவர் சொல்றதை கேட்டு அப்படியே நடக்கிறாராம்..! சைலண்டா வேலைய பார்த்த மனைவி..?

Author: Vignesh
23 December 2022, 1:00 pm

பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர் இவரது ஒரே மகன் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள விஜய்க்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமின்றி மாஸ் நடிகராகவும் உள்ளார் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் அவரது அப்பாதான்.

அப்பாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான விஜய் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்றும் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை சரியில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் ஒரே மகனான விஜய் பெற்றோரின் பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்கவில்லை, தற்போது சதாபிஷேக விழாவிலும் பங்கேற்கவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு தலைவனாக இருந்து கொண்டு இப்படி பெற்றோரை தவிக்க விடுவது நியாயமில்லை என்றும், ரசிகர்களுக்கு தவறான முன் உதாரணமாக இருக்கக் கூடாது என்றும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். என்னதான் கோபம் இருந்தாலும் இதுபோன்ற விசேஷங்களை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

vijay updatenews360

இதனிடையே, மாஸ் நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயரோடும் விஜய் புகழப்படுகிறார். கோடிக்கணக்கில் பிசினஸ் ஏற்பட்டதால் மனைவி சங்கீதாவின் மாமனாரின் கண்ட்ரோலில் விஜய் சென்றுவிட்டதாகவும், இந்த காரணத்திற்காக தான் எஸ் ஏ சி கோபமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நடிகர் விஜய் தான் சம்பாதிக்கும் பணத்தை மாமனாரின் பிசினஸில் முதலீடு செய்து வருகிறார். சினிமாவில் சரிவு ஏற்பட்டால் லண்டனில் செட்டில் ஆகிவிடலாம் என்ற நோக்கத்துடன் விஜய் செயல் பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Vijay - Updatenews360

அப்பா மகன் இருவரையும் சமாதானப்படுத்தாமல், அப்பாவை ஒதுக்கி வைக்கும் அளவிற்கு மனைவி சைலெண்டாக இப்படியொரு வேலையை செய்தும் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!