“முடிவு எடுத்தால் முதல்வர் தான்” : மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரல்..!

Author: Rajesh
24 மார்ச் 2022, 3:48 மணி
Quick Share

நடிகர் விஜய் தமிழ் முன்னணி நடிகர்களின் ஒருவர். இவர் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகளும் வெளி வந்த வண்ணம் உள்ளன.

பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தை வம்சி பைடபள்ளி இயக்க, தில் ராஜு தயாரிக்கிறார். இது தமிழ் தெலுங்கில் உருவாக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி வருகிறார் விஜய்.

விஜய்யின் அரசியல் ஆலோசனை மற்றொரு புறம் விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றி, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக நடிகர் விஜய் அவ்வப் போது ரகசியமாக அரசியல் தொடர்பான ஆலோசனைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அவர் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாகவும் இதனால் விஜய்க்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும் கூட தகவல்கள் வெளிவந்தது.

தொடர்ந்து ஒட்டு மொத்த விஜய் ரசிகர்கள் பீஸ்ட பட எதிர்பார்த்திருக்கும் இந்த வேலையில் மதுரையில் விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

அந்த போஸ்டரில், விஜய் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கஇ முடிவெடுத்தால் முதல்வர் தான். 2021 ல் தளபதி, 2026 ல் தளபதி 2026ல் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர் என விஜய்யின் போட்டோவிற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில், 2026 அரசியல் ஆலோசகர், தளபதி மக்கள் இயக்கம், தமிழ்நாடு என பிரசாந்த் கிஷோரின் போட்டோவும் போடப்பட்டுள்ளது. விஜய் போஸ்டரில் பிரசாந்த் கிஷோரின் போட்டோ இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Nithyananda Ranjitha நித்யானந்தா உடன் தான் இருக்கிறேன்.. ரஞ்சிதா வெளியிட்ட பகீர் தகவல்!
  • Views: - 1005

    0

    0