சேச்சி சேட்டன்மார்… மலையாளத்தில் பேசி ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய விஜய்..!(வீடியோ)

Author: Vignesh
21 March 2024, 1:03 pm

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Vijay - Updatenews360

இதனிடையே, சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்திருந்த நிலையில், 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் அந்த கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார்.

Vijay - Updatenews360

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு க்யூட்டான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. திருவனந்தபுரத்தில், இருக்கும் ஸ்டேடியத்தில் GOAT படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. விஜய் நேற்று முன்தினம் அங்கு தனி விமானத்தில் வந்திருந்த போது, ஏர்போர்ட்டில் பெரிய அளவு ரசிகர் கூட்டம் கூடிவிட்டது. அதன் பின் நேற்று மாலை ஷூட்டிங்கில் தன்னை பார்க்க கூடியிருந்த ரசிகர்களுக்காக பஸ் மீது ஏறி எல்லோருக்கும் கை அசத்து செல்பி எடுத்துக் கொண்டார்.

ரசிகர்கள் கூடிய நிலையில், அவர்களை விஜய் சந்தித்திருக்கிறார். ரசிகை ஒருவர் போட்ட மாலையை அன்புடன் ஏற்றுக் கொண்டார். விஜய் பஸ் மீது ஏறி விஜய் ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி இருக்கிறார். அதை ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரசிகர்களை சந்தித்த விஜய் அதில், ஒரு சிறுமையை தூக்கி வைத்துக்கொண்டு அந்த சிறுமி ஆசையில் விஜயை கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!