உங்களுக்கு அறுகதையே இல்லை- கோலி சோடா இயக்குனர் போட்ட ஆவேச டிவிட்! ஏன் இவ்வளவு கோபம்?

Author: Prasad
6 August 2025, 7:33 pm

ஆவேச டிவிட்

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான “கோலி சோடா”, “கோலி சோடா 2” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து இதன் வரிசையில் “கோலி சோடா” திரைப்படத்தின் சில அம்சங்களை கொண்டு “Gods and Soldiers” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனை Legacy of Goli Soda என்று அழைக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள ராப் பாடகர் வேடன் இசையமைத்து இதில் நடிக்கவும் செய்கிறார்.

Vijay milton shared the tweet because of singer vedan 

இந்த நிலையில்தான் நேற்று விஜய் மில்டன் தனது எக்ஸ் தளத்தில், “குயிலின் நிறத்தை விமர்சிப்பவர்களுக்கு அதன் குரலை ரசிக்கும் அருகதை இல்லை” என்று டிவிட் ஒன்றை பகிர்ந்திருந்தார். மேலும் அதில் தான் வேடனுடன் இருக்கும் போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். ஏன் இவர் இவ்வாறு டிவிட் போட்டிருக்கிறார்? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். 

ஏன் இந்த டிவிட்?

ராப் பாடகர் வேடன் மீது சமீபத்தில் கொச்சியை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் மில்டனின் டிவிட் குறித்து பேசிய பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன், “பலரும் விஜய் மில்டனுக்கு ஃபோன் செய்து வேடன் மீது பாலியல் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

Vijay milton shared the tweet because of singer vedan 

உங்கள் படத்தில் அவர் இருக்கிறாரா? இல்லையா? என கேட்டிருக்கின்றனர். அதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் இந்த டிவிட்டை பகிர்ந்திருக்கீறார்” என இதன் பின்னணி குறித்து கூறியுள்ளார். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!