மகன் சஞ்சய் குறித்து விஜய்க்கு இப்படியொரு ஆசை இருந்ததா… ஆனால் அது நடக்கவில்லையாம் வருத்தத்தில் தளபதி..!

Author: Vignesh
15 February 2023, 12:30 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார். மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார்.

ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூட சஞ்சய்காக கதை எழுதி படம் இயக்கவிருந்தார். ஆனால், சஞ்சய் தற்போது தனக்கு இன்டர்ஸ்ட் இல்லை என்று கூறியதாக விஜய் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், சஞ்சய் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியிருந்தார் சஞ்சய், அதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் புதிய குறும்படத்தை இயக்கி வருகிறார். இதனால், விரைவில் ஒரு இயக்குனராக சஞ்சய் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கபட்டு வருகிறது.

ஆனால், சஞ்சய்க்கு இயக்கத்தில் மட்டுமே ஆர்வம் இருக்கிறது என்றும், நடிப்பதற்கு அவர் தயாராக இல்லை என்றும் கோலிவுட் வட்டாரத்தால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே, நடிகர் விஜய் தன்னுடைய மகன் சஞ்சய்யை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் என்று தான் நினைத்தாராம். அதற்காக விஜய் தன்னுடைய வீட்டின் மொட்டைமாடியில் மினி கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றை விஜய் அமைத்து வைத்திருந்தாராம்.

அதுமட்டுமின்றி விஜய் சஞ்சய்க்கு பயிற்சி கொடுக்க தனி பயிற்சியாளரையும் நியமனம் செய்தாராம். ஆனால் காலப்போக்கில் சஞ்சய் இயக்குனராக வேண்டும் என்று முடிவு செய்து தற்போது குறும் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 228

0

0