தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் 5 மணிக்கு மேல் அத பண்ணவே மாட்டேன் – கறார் காட்டும் விஜய்!

Author: Shree
28 September 2023, 3:51 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக இருக்கும் விஜய் டாப் ஹீரோ அந்தஸ்தில் இருந்து வருகிறார். இவரது படங்கள் வெளியாகும் நாள் திருவிழா கோலம் போன்று காட்சியளிக்கும். உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக இருந்து வரும் விஜய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான படத்தில் நடிப்பதில் அக்கறை கொண்டிருப்பார்.

விஜய்யின் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்பது தான் சினிமாவில் நுழையும் பல பேரது கனவாக இருக்கிறது. இந்த வயசிலும் பல இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்து வருகிறார் விஜய். இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி தனக்கென தனி கொள்கையை வைத்திருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவார். எப்போது கட்டான தோற்றத்தை மெயின்டைன் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய் குறித்த ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எப்பேற்பட்ட இயக்குனரின் படமாக இருந்தாலும் விஜய் சாயங்காலம் ஆறு மணி ஆகிட்டா டக்குனு ஷூட்டிங்கில் இருந்து வெளியே வந்து விடுவாராம். அவர் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போதே 6 மணிக்குள் முடித்துவிடுங்கள் என கூறிவிட்டு தனது வேலையை சிறப்பாக செய்துக்கொடுத்து குறித்த நேரத்திற்குள் ஷூட்டிங்கில் இருந்து கிளம்பி சென்றிடுவாராம்.

வீட்டிற்கு போனதும் இரவு ஏழு மணிக்கு டின்னர், ஒன்பது மணிக்கு தூக்கம். அடுத்தநாள் காலை 5 மணிக்கே எழுந்து சின்னதா கொஞ்சம் ஒர்கவுட் முடித்துவிட்டு வழக்கம்போல் சூட்டிங் கிளப்பி செல்வாராம். இந்த நேரங்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் மிகச்சரியாக தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வாராம். விஜய்யிடம் என்னதான் தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் சாயங்காலம் 6 மணிக்கு மேல் சுபகாரியங்கள் தவிர எங்குமே செல்லமாட்டாராம். ஒரு நட்சத்திர நடிகர் இவ்வளவு ஆரோக்கியமாக தன்னை பார்த்துக்கொள்வதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?