விளம்பரத்திற்காக உணவளிக்கும் விஜய் மக்கள் இயக்கம்? நிர்வாகிகளால் அப்செட்டில் விஜய்.. வைரலாகும் ஷாக் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2023, 4:25 pm

விளம்பரத்திற்காக உணவளிக்கும் விஜய் மக்கள் இயக்கம்? நிர்வாகிகளால் அப்செட்டில் விஜய்.. வைரலாகும் ஷாக் வீடியோ!!!

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இதனால், வட தமிழக கடற்கரையை நோக்கி நகர துவங்கிய இந்த புயலால் டிசம்பர் 4ந் தேதி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்துவிட்டது. இதனால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை பெய்த மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மழை நின்ற பின் வெள்ளம் வடியாததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதையடுத்து தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவி செய்து வருகின்றனர். மேலும் தன்னார்வலர்கள் களப்பணியாற்ற முதலமைச்சர் அழைப்புவிடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு நடிகர் விஜய் தனது X தளப்பக்கத்தில், களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பணிகள் செய்ய அறிவுறுத்தியிருந்தார்.

ஏற்கனவே பல்வேறு உதவிகளை செய்து வரும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், தற்போது விஜய் கட்டளையிட்டதும் நிவாரணப் பொருட்கள், உணவு, தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் சமூகவலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ நடிகர் விஜய்யை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பிட்ட அந்த வீடியோ விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முதியோர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

ஆனால் அவர் பக்கத்தில் ஒரு நபர் விஜய்யின் புகைப்படத்தை பிடித்தவாறு ஒவ்வொரு முறையும் உணவு பரிமாறுபவரின் அருகிலேயே சுற்றி சுற்றி வருகிறார். ஒரு நல்லது செய்யும் போது இந்த வீண் விளம்பரம் தேவையா? விளம்பரத்துக்காக விஜய் இப்படி செய்கிறாரரோ என்ற எண்ணம் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் மனதிலும் தோன்றும்.

மக்களுக்கு சேவையாற்றுவது மனிதாபிமான அடிப்டையில் இல்லையோ வெறும் வெற்று விளம்பரத்திற்கு தானோ என்ற கேள்வியை எழுப்புகிறது. இது விஜய்யை மட்டுமல்ல அவர்களின் ரசிகர்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!