அஜித் வீட்டுக்கு போவதற்கு முன் விஜய் போட்ட கண்டிஷன்: புகழ்ந்து தள்ளும் அஜித் ரசிகர்கள்

Author: Rajesh
26 March 2023, 7:15 pm
Quick Share

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் – அஜித். திரைத்துறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இவர்கள் திரைப்படம் வெளியானாலோ, பிறந்த நாளாக இருந்தாலோ சமூக வலைத்தளங்கள் எங்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் ட்ரெண்ட் ஆவது வழக்கம்.

Vijay Ajith - Updatenews360

இந்நிலையில், 85 வயது ஆன அஜித் குமாரின் அப்பா சுப்ரமணியம் அவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். கடந்த 24ம் தேதி காலையில் தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது. அப்பாவின் இறுதிச்சடங்கு குடும்ப நிகழ்வாக இருக்கும் என அஜித் குமார் மற்றும் அவரது சகோதர்ரகள் அனுப் குமார், அனில் குமார் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.

அஜித் அப்பாவின் மரண செய்தி அறிந்த சினிமா பிரபலங்கள் சிலர் தங்கள் பதிவின் மூலமாகவும், மெசேஜ் மூலமாகவும் தங்கள் ஆறுதலை கூறி வந்தனர். இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய், தந்தையை இழந்து வாடும் நண்பர் அஜித்தை பார்க்க அவரின் வீட்டிற்கு சென்றார். அஜித்தை நேரில் பார்த்து ஆறுதல் கூறியுள்ளார் விஜய். அஜித் வீட்டிற்கு வந்த அவரது காரின் புகைப்படம் மட்டுமே வெளியானது.

ajith

மற்றபடி அஜித்தும், விஜய்யும் சந்தித்துக் கொண்ட புகைப்படமோ, விஜய்யின் புகைப்படமோ வெளியாகவில்லை. இந்நிலையில், அஜித் வீட்டிற்கு செல்வதற்கு முன் விஜய் போட்ட கண்டிஷன் பற்றி தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது அஜித்தின் குடும்ப விஷயம். நான் அங்கு செல்வது எந்த காரணத்திற்காகவும் பப்ளிசிட்டியாக மாறிவிடக் கூடாது. நான் அஜித் வீட்டிற்கு செல்வது முன்கூட்டியே யாருக்கும் தெரியக் கூடாது என தன் டீமிடம் கறாராக விஜய் கூறிவிட்டாராம்.

Vijay Ajith - Updatenews360

நண்பர் அஜித் வீட்டிற்கு நான் செல்வது தெரிந்தால் ரசிகர்கள் அங்கு கூடிவிடுவார்கள். இது அஜித் குடும்பத்தாருக்கு சங்கடமாகிவிடும். இது போன்ற நேரத்தில் அஜித்துக்கு எந்த தொல்லையும் கொடுக்கக் கூடாது என்று விஜய் கூறியுள்ளார். அதனால் தான் சத்தமில்லாமல் சென்றுவிட்டு வந்தாராம். அஜித் வீட்டின் முன்பு செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் கூடியிருந்தார்கள்.

அவர்கள் விஜய்யின் காரை பார்த்ததும் சார், ஒரேயொரு போட்டோ சார் என கேட்டதற்கு, இப்போ வேண்டாம், தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் விஜய். இந்த செயலை அறிந்த அஜித் ரசிகர்கள் தளபதியை பாராட்டிக் வருகின்றனர். லியோ படப்பிடிப்புக்காக காஷ்மீரில் இருந்த விஜய், மார்ச் 23ம் தேதி சென்னை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 622

19

3