அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை; தயவு செய்து அதை சொல்லாதீங்க- கல்வி விழாவில் விஜய் வேண்டுகோள்!

Author: Prasad
13 June 2025, 12:19 pm

விஜய்யின் கல்வி விருது விழா

கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சிப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் விருதும் வழங்கி வருகிறார் தவெக தலைவர் விஜய்.  அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான கல்வி விருது வழங்கும் விழா மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 

vijay requested that do not call him as ilaiya kamarajar

இதில் முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழா கடந்த மே மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 88 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் விருதும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா கடந்த ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மூன்றாவது கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 51 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையும் விருதும் வழங்கப்பட்டது.

தயவு செய்து அப்படி சொல்லாதீங்க

இன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய், “நேற்று குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விபத்து நடந்தது. விபத்து சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கும்போது மனது பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை. ஆதலால் விபத்தில் மரணித்த அனைவருக்காகவும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார். அதன் பின் இரண்டு நிமிடங்கள் அந்த அரங்கில் இருந்த அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர். 

vijay requested that do not call him as ilaiya kamarajar

அதன் பின் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் விருதும் அளிக்கத் தொடங்கினார் விஜய். அப்போது ஒரு மாணவரின் தந்தை ஒருவர், “2026 ஆம் ஆண்டு விஜய் அவர்களை முதல்வர் ஆக்குவோம்” என பேசினார். அதனை தொடர்ந்து பேசிய விஜய், “உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். 2026-ஐ பற்றி பேசாதீர்கள். என்னை இளைய காமராஜர் எனவும் கூறாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார். விஜய் இவ்வாறு பேசிய வீடியோ துணுக்கு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!