விஜயை அடித்த நடிகர்.. நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் என பழிக்கு பழி தீர்த்த சம்பவம்..!

Author: Vignesh
13 July 2023, 11:17 am

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான மிஸ்கின் லியோ படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்.

mysskin- updatenews360

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜயை குட்டிமா, விஜய்மா, அண்ணா என்று கூப்பிடுவேன் என்றும், விஜய்க்கு உடம்பில் பல அடிகள் பட்டு இருப்பதாகவும், ஒரு சமயத்தில் லியோ சூட்டிங்கில் சண்டையிடும் போது திரும்பி ஒரு பன்ச் பண்ணியதில் விஜய்க்கு அடிபட்டுவிட்டதாகவும், அப்போது தான் ஓடி வந்து கட்டிப்பிடித்து குட்டிமா சாரிடா என்று கூறியதற்கு விஜய் பரவால அண்ணா என்று சொல்லி அவரும் சரியாக ரிகல்சல் பண்ணனும்னு சொல்லிட்டு போயிட்டாரு என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதுக்கு அப்புறம் அவர் என்னை அடிச்சதும் தனக்கு முகத்தில் அடிபட்டு விட்டதாகவும், பதறி அண்ணா சாரி அண்ணா என்று கூறியதாகவும், அதெல்லாம் ஒன்னும் இல்ல செல்லக்குட்டி ஒவ்வொருவருக்கும் நடப்பதுதான் என்று மிஸ்கின் கூறியதாக பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் மிஸ்கினை விஜய் பழிக்கு பழி வாங்கி விட்டார் என்று கலாய்த்து வருகிறார்கள்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?