உயிரென வர்றேன் நான்- தவெக மாநாட்டில் ரசிகர்கள் படைசூழ விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ
Author: Prasad22 August 2025, 3:36 pm
நேற்று தவெகவின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் தொண்டர்கள் படை சூழ நடைபெற்றது. மாநாடு நேற்று மாலை தொடங்கிய நிலையில் காலையில் இருந்தே கடும் வெயிலில் மாநாடு நடக்கும் இடத்தை தொண்டர்களின் கூட்டம் நிரப்பியிருந்தது. தொண்டர்களின் கூட்டம் அலைகடலென காட்சியளித்தது.

குறிப்பாக விஜய் ரேம்ப் வாக் செய்தபோது தொண்டர்கள் பலரும் ரேம்ப் வாக் மேடையில் ஏறி விஜய்யை சூழ்ந்தனர். அவர்களை எல்லாம் பவுன்சர்கள் தடுத்தி நிறுத்தியதால் சில வினாடிகள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின் மாநாட்டு மேடையில் பேசிய விஜய், பாஜக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் மிக கடுமையாக விமர்சித்தார். மேலும் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் விஜய் ரேம்ப் வாக் மேடையில் இருந்து தனது ரசிகர்களின் படை சூழ எடுத்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் விஜய். மாநாட்டுக்கு என்றே சிறப்பாக உருவாக்கப்பட்ட பாடல் வரிகளையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உங்க விஜய் உங்க விஜய்
— Vijay (@actorvijay) August 22, 2025
உயிரென வர்றேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
தனி ஆள் இல்ல கடல் நான் pic.twitter.com/FRQcu4b8aq
