என் மேல எதுவும் தப்பு இருக்கா? ரசிகர்களை பார்த்து விஜய் சேதுபதி கேட்ட கேள்வி! என்னவா இருக்கும்?
Author: Prasad22 August 2025, 1:10 pm
பிசியான நடிகர்
நடிகர் விஜய் சேதுபதி சமீப காலமாக படு பிசியான நடிகராக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் நடித்த “தலைவன் தலைவி” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மிஷ்கினின் “டிரெயின்” திரைப்படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி தற்போது பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி தன் மீதும் தனது மகன் மீதும் வைக்கப்படும் பல விமர்சனங்கள் குறித்து பதில் அளித்துள்ளார்.

என் மேல் தவறு இருந்தால்?
“எல்லா இடத்திலும் நெகட்டிவான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதனை தடுக்க முடியாது. ஆனால் அதனை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொள்வதுதான் முக்கியம்” என பேசினார்.
மேலும் பேசிய அவர், “ரசிகர்களை மகிழ்விக்கவே விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்கிறேன். என் மீது தவறுகள் எதுவும் இருந்தால் சொல்லுங்கள். நான் அதனை திருத்திக்கொள்கிறேன்” என மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி நடித்த “ஃபீனிக்ஸ்” திரைப்படம் வெளியாகி விமர்சனத்திற்குள்ளானது. அது மட்டுமல்லாது சூர்யா சேதுபதியின் சில பேட்டிகளையும் அவர் பபுள்கம் மென்றபடி புகைப்படங்களுக்கு கொடுத்த போஸ்களையும் நெட்டிசன்கள் ட்ரோலுக்குள்ளாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
