கைதாகிறாரா விஜய் சேதுபதி..? பிறந்த நாளன்று செய்த செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

16 January 2021, 1:02 pm
Quick Share

மக்கள் செல்வன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள். சாதாரண நாட்களிலேயே அவரை உறவென கொண்டாடும் மக்கள் இன்று பிறந்தநாள் என்பதால் full fun mode இல் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் குறும்படம் மற்றும் திரைப்படங்களில் side கேரக்டர் என தனது கேரியரை தொடங்கிய விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக நடித்து இன்று வேற லெவலில் உயர்ந்து நிற்கிறார். ஹீரோ, வில்லன், துணை நடிகர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வதால், மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். பேட்ட படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கூட ரஜினி வரை மகாநடிகன் என போற்றினார்.

இந்நிலையில் இவருக்கு பிறந்த நாள் என்பதால் இவர் கேக் வெட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில் பட்டா கத்தியால் கேக் வெட்டுவது போல் இருந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது. ரவுடிகளை போல பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டுவது நல்லதல்ல போன்ற பேச்சுக்கள் கமெண்ட் செக்ஷனில் வரத்தொடங்கியது.

இதற்கு வருத்தம் தெரிவித்து விஜய் சேதுபதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என்னை வாழ்த்திய ரசிகர்கள், திரை உலக பிரபலங்கள் என அனைவருக்கும் நன்றி. எனது பிறந்தநாளை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன் என் அலுவலகத்தில் கேக் வெட்டிய புகைப்படம் விவாதத்திற்குரியது ஆகியிருக்கிறது. தற்போது பொன்ராம் சார் படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தில் பட்டா கத்தி முக்கிய கதாபாத்திரமாக வரும். ஆகவே அந்தப் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடியதால் பட்டாக் கத்தியால் கேக்கை வெட்டினேன். இது பல பேருக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாது என்ற கருத்து தெரிவித்திருந்தார்கள். இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது புண்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளவும் என கூறியிருந்தார்.

விஜய் சேதுபதியின் இந்த அறிக்கையும் அவர் கோரிய மன்னிப்பும் அவரின் மேலும் உயர்ந்த நிலையை காட்டுகிறது என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பட்டா கத்தியை பயன்படுத்திய நபர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வந்த நிலையில், விஜய் சேதுபதியும் கைது செய்யப்படுவாரா..? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதானா..? என்பது இந்த விவகாரத்தில் தெரிய வந்து விடும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 5

0

0