96 இரண்டாம் பாகத்தில் இவர்தான் ஹீரோவா? விஜய் சேதுபதி இல்லாத 96 படமா? நெவர்!
Author: Prasad23 May 2025, 5:40 pm
காதலே தனிப்பெரும்துணையே
2018 ஆம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உணர்வுப்பூர்வமான காதல் காட்சிகள் தழும்ப தழும்ப உருவான திரைப்படம் “96”. இத்திரைப்படத்திற்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்தளவுக்கு இத்திரைப்படம் பல ரசிகர்களின் மனதை உருகவைத்த காதல் திரைப்படமாக அமைந்தது.
குறிப்பாக விஜய் சேதுபதி-திரிஷா ஜோடியை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்தளவுக்கு இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருந்தது. இவ்வாறு காலம் தாண்டியும் ரசிக்கப்படும் திரைப்படமாக உருவான “96” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் பிரேம்குமார் திட்டமிட்டு வருவதாகவும் இதன் கதையை ஐசரி கணேஷிடம் பிரேம்குமார் கூற அவருக்கு கதை பிடித்துப்போய் நிச்சயம் “96 பார்ட் 2” திரைப்படத்தை தயாரிப்பதாக கூறினார் எனவும் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் விஜய் சேதுபதி?
பிரேம்குமார் “96 பார்ட் 2” படத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் விவரிக்க விஜய் சேதுபதிக்கு அக்கதை அவ்வளவாக பிடிக்கவில்லையாம். ஆதலால் விஜய் சேதுபதி “96 பார்ட் 2” திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது.
அந்த வகையில் இத்திரைப்படத்தின் கதையை பிரதீப் ரங்கநாதனிடம் கொண்டு சென்றாராம் பிரேம் குமார். ஆனால் பிரதீப் ரங்கநாதனோ “இந்த கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இது எனக்கேத்த கதை இல்லை” என கூறிவிட்டாராம். இதனால் “96 பார்ட் 2” திரைப்படத்தில் யார் கதாநாயகன் என்பது குறித்த குழப்பம் நீடிக்கிறதாம்.