மீண்டும் ஹிட் படத்தைக் கையில் எடுக்கும் சுந்தர் சி..! 3- ம் பாகத்தில் மொக்கை வாங்கினாலும் பார்ட் 4-க்கு தயார்..!
Author: Vignesh21 January 2023, 1:30 pm
இயக்குனர் சுந்தர் சி பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்களை கவர்ந்தவர். 2014 -ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து அரண்மனை இரண்டாம் பாகம் மீண்டும் புதிய கூட்டணியில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே பெற்றது.
இருப்பினும் அரண்மனை இரண்டாம் பாகம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றது. இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இதற்கு கிடைத்த வரவேற்பால் சுந்தர் சி ஆர்யாவை வைத்து அரண்மனை மூன்றாம் பாகத்தை உருவாக்கினார். அரண்மனை மூன்றாம் பாகத்திற்கும் கலவையான விமர்சனம் தான் வந்தது.
இந்நிலையில் சுந்தர் சி அரண்மனை நான்காம் பாகத்தை இயக்க போவதாகவும், இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுக்கிறது.