ஷாருக் கானுடன் இணையும் விஜய் சேதுபதி

12 November 2020, 7:30 pm
Quick Share

அமீர்கான் நடித்து வரும் திரைப்படம் ‘லால் சிங் சட்டா’. இது 1994 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியது போன்று உருவாக்கப்பட்ட இந்த படம், பல விருதுகளை வென்றது.

இத்திரைப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து பல பிரபலங்கள் நடிக்கின்றனர். விஜய் சேதுபதியும், அமீருடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் ஷாரூக் கான் கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடித்து கொடுத்துவிட்டு அதன் பின்னர்தான் துபாய்க்கு ஐபிஎல் போட்டிகளை பார்க்க ஷாருக் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

Views: - 22

0

0