ரசிர்களின் வாழ்த்து மழையில் விஜய் சேதுபதி… 8 ஆண்டுகளுக்கு பின் நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2025, 6:09 pm

மக்கள் மத்தியில் தனக்கென ஒரு செல்வாக்கை உண்டாக்கிய நடிகர் விஜய் சேதுபதி இவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர் பட்டாளம் இவரை சூழ்வது வழக்கம்.

இவர் நேரம் இருக்கும்போதெல்லாம் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் ரசிகர்களை அழைத்து போட்டோ சூட் எடுப்பது வழக்கம்.

இதையும் படியுங்க: மீண்டும் வைரலாகும் “அஜித்தே”…AK-க்கு தனது ஸ்டைலில் வாழ்த்து கூறிய ஹிப் ஹாப் ஆதி..!

தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் பிக் பாஸ் படபிடிப்பு வந்ததன் காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி அவர்களுடன் போட்டோ சூட் எடுத்ததில்லை.

இந்நிலையில் பொங்கல் மற்றும் அவரது பிறந்த நாளை ஒட்டி விஜய் சேதுபதி கொளப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தனது மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ரசிகர்களையும் வரவழைத்து அவர்களுடன் போட்டோ சூட் எடுத்துக்கொண்டார்.

Vijay Sethupathi Meet his fans after 8 Years

நடிகர் விஜய் சேதுபதியுடன் போட்டோ சூட் என்றாலே ஒவ்வொரு நபர்களும் குறைந்தது சுமார் பத்து போட்டோ வரை எடுப்பார்கள் அவரும் அதற்கு சலைக்காமல் ரசிகர்களின் அன்பை வாங்கிக் கொள்வார்.

இந்த போட்டோ சூட்டில் நடந்த நிகழ்வு அதேதான் பல நாட்கள் கழித்து பார்க்கும் விஜய் சேதுபதியை ரசிகர்கள் முகத்தில் முத்தமிட்டு கட்டி அணைத்து என மாறி மாறி போட்டோ சூட் எடுத்துக் கொண்டனர்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?