கிரிக்கெட் பேட், பேடு உடன் பைக்கில் சென்ற விஜய் சேதுபதி, புகழ்: வைரலாகும் புகைப்படம்!

Author: Poorni
25 March 2021, 8:44 am
Quick Share


தனது 46ஆவது பட த்தில் விஜய் சேதுபதி கிரிக்கெட் பேட் மற்றும் பேடு உடன் பைக்கில் சென்ற விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், யோசிக்காமல் செய்யக்கூடியவர்.

திருநங்கை, வயதான கதாபாத்திரம், வில்லன் ரோல் என்று பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இறுதியில், வில்லன் கொல்லப்படுவார். ஆனால், தனக்கு இருக்கும் மார்க்கெட் பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாமல் நடித்திருந்தார்.


வருடத்திற்கு 6க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெளியிட்டு வந்தார். தற்போது இவரது நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், மும்பைகார், காந்தி டாக்ஸ், மகிழ், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியானது. தற்காலிகமாக விஜய்சேதுபதி46 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள பட த்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இந்தப் பட த்திற்கு இசையமைக்கிறார்.


மோஷன் போஸ்டரில், போலீஸ் ஜீப் மற்றும் கேப், லத்தி, வாக்கி டாக்கி ஆகியவை இடம்பெற்றுள்ள நிலையில், படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தில் மாடல் அனுக்ரீத்தி வாஸ் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தவிர மற்ற மாஸ் நடிகைகளிடமும் பேசப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், இந்தப் பட த்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடந்து வருகிறது. அதில், விஜய் சேதுபதியில் பேட் மற்றும் பேடு உடன் பைக்கில் சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் பட த்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் நடிக்கிறார். விஜய் சேதுபதியுடன் புகழும் பைக்கில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் பட த்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய நிலையில், படப்பிடிப்பு தளத்தில் வாக்குவாதம் எழுந்தது. இதையடுத்து, படப்பிடிப்பு காட்சி நிறுத்தப்பட்டது. விஜய் சேதுபதி நடிப்பில் வந்த சூப்பர் டீலக்ஸ் பட த்திற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது விஜய் சேதுபதிக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

, Vijay Sethupathi, Pugazh, Cooku With Comali Pugazh, VJS46, VS46, Vijay Sethupathi National Award

Views: - 81

0

0