வெளிய வந்ததும் அசிங்கமா பேசிய அர்னவ்…. கோபத்தில் கொந்தளித்த விஜய் சேதுபதி!

Author:
21 October 2024, 10:33 am

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியின் சுவாரசியம் அதிகரித்து வருகிறது. இந்த சீசன் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்து போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

24 மணி நேரத்திலேயே சாக்சனா வெளியேறினார். அதையடுத்து ஒரு வாரத்தில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதை அடுத்து இரண்டாவது வார நாமினேஷன் லிஸ்டில் பிஜே விஷால், தர்ஷா குப்தா , அர்னவ் ஆகியோர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.

bigg boss s8

அதில் எல்லோரையும் விட குறைந்த வாக்குகள் பெற்று அர்னவ் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த அர்னவ் விஜய் சேதுபதியின் இடத்திற்கு வந்த பிறகு உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களான சத்யா, விஷால், அர்னவ், தீபக் இவங்க எல்லாரும் ரொம்ப ஜால்ரா அடிக்கிறாங்க.

டேய் நீங்க எதுக்குடா பிக்பாஸுக்கு வந்தீங்க? ஒன்றாக கும்பலா சேர்ந்துட்டு குரூப் பார்ம் பண்ணிட்டு அடுத்தவங்கள நோகடிக்குறது தான் நீங்க பிக் பாஸ்க்கு வந்தீங்களா? என கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் அவர்களை பயங்கரமாக திட்டினார் .

bigg boss arnav

அர்னவ்வின் இந்த பேச்சுக்கு ஆடியன்ஸ் மிகப்பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கொடுத்தாலும் விஜய் சேதுபதிக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. இந்த இடத்தில் வந்து கருத்து சொல்லலாம். ஆனால் நீங்க வன்மத்தை கக்கிக்கிட்டு இருக்கீங்க. இது அநாகரிகமா இருந்தாலும் இப்படி பண்ணாதீங்க. முதல்ல நீங்க இந்த டோன்லயே பேசக்கூடாது அவங்க என்னோட ஹவுஸ் மேட் இந்த மாதிரி நீங்க பேசுவதை நிறுத்துங்க முதல்ல உங்களில் நாமினேட் பண்ணது ஆண்களே கிடையாது.

இதையும் படியுங்கள்: பலாத்காரத்திற்காகவே படைக்கப்பட்டவரா துஷாரா….? வெளுத்து வாங்கிய பெண்!

கேர்ள்ஸ் தான் உங்களை நான் மீட் பண்ணாங்க அது மட்டும் இல்லாம பாய்ஸ் உங்களுக்கு ஓட்டு போடல உங்களுக்கு ஓட்டு போடறது மக்கள்தான் அவங்களுக்கு உங்களோட பர்ஃபார்மன்ஸ் பிடிக்கல அதனால குறைந்த ஓட்டுகள் பெற்று நீங்க வெளியேறினீங்க. உங்களுக்கும் நீங்க வெளியேறுத்துக்கும் பாய்ஸுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. நீங்க சம்பந்தம் இல்லாம பேசுறீங்க என அர்னவ் என கடுமையாக திட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!