விடுதலை 2 குட்டி பெருமாள் வாத்தியாராக நடிக்கும் விஜய் சேதுபதி மகன்.. இணையத்தில் லீக்கான புகைப்படம்..!

Author: Vignesh
21 April 2023, 5:30 pm

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக விடுதலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து உள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார்.

viduthalai updatenews360

கதையின் நாயகனாக சூரி நடித்து இருக்கிறார். வாத்தியாராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். இவர்களுடன் கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மார்ச் 31 அன்று உலகம் முழுவதும் வெளியான ‘விடுதலை-1’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது.

viduthalai dp

இப்படம் ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும், திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சூரி வழக்கமான தனது பாணியில் இருந்து முற்றிலும் விலகி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் விடுதலை படத்தின் அடுத்த பாகம் குறித்து நடிகர் சூரி பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது சூர்யா, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

viduthalai-updatenews360

இதனிடையே, சூர்யா ஏற்கனவே தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த சிந்துபாத் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், சிந்துபாத் படத்தில் பார்த்த சூர்யாவை போல் இல்லாமல் விடுதலை படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

viduthalai-updatenews360
  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?