பாலிவுட்டில் பட்டறை போட்ட விஜய் சேதுபதி… ரூ. 500 கோடி பட்ஜெட் படத்தில் பிரம்மாண்ட ரோல்!

Author: Rajesh
27 January 2024, 3:18 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.

தற்போது பாலிவுட் சினிமாவில் அதிக கவனத்தை செலுத்தி வரும் விஜய் சேதுபதி கடைசியாக நடிகை கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக Merry Christmas திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தற்போது ரூ. 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இராமாயணம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி இராவணனின் தம்பி விபீஷணன் ரோலில் நடிக்கிறாராம்.

இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோர் தான் இராமர் மற்றும் சீதையாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்தடுத்த இந்தி திரைப்படங்களில் கமிட்டாகி வருவதால் அவர் பாலிவுட்டில் பட்டறை போட்டுவிட்டதாக கோலிவுட் சினிமா முணுமுணுக்கிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!