சேச்சி இவ்வட என்ன நடக்குது.. ஆளே மாறிப்போன சரண்யா மோகனின் ரீசன்ட் கிளிக்..!

Author: Vignesh
26 March 2024, 3:43 pm
saranya-mohan
Quick Share

தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு தங்கை, ஹீரோவுக்கு தங்கை என குணசித்திர வேடங்களில் நடித்தே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மனம் கவர்ந்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருப்பார் மேலும் கருணாஸ், கார்த்தி குமார் போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வெளியானபோது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றியை தந்தது.குறிப்பாக நயன்தாராவின் தங்கையாக இந்த திரைப்படத்தில் நடித்த சரண்யா மோகன் மிகப்பெரும் அடையாளத்தை தேடிக்கொண்டார்.

இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சரண்யா கடந்த 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் எதுவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குழந்தை பிறப்பிற்கு பின்னர் உடல் எடை கூடியிருந்த சரண்யா மோகன் பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறிவிட்டார். காரணம் அவர் ஒரு பரதநாட்டிய கலைஞர். நாட்டியம் ஆடுவதற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அதற்காக தினமும் தவறாமல் ஒரு மணிநேரம் ஜிம் சென்று பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனுடன் யோகா, வாக்கிங் என ஆகியவற்றையும் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் சரண்யா தற்போது, இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து க்யூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 35 வயதாகும் சரண்யா மோகனின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்து விஜய்க்கு தன்மையாக நடித்த சரண்யாவா இது என்று ஷாக் ரியாக்ஷனை ரசிகர்கள் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 76

0

0