வாரிசு நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் தேவயானியின் மகள்.. நீ வருவாயா படத்தின் 2-ம் பாகமாம்..!

Author: Vignesh
12 July 2023, 6:23 pm

1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த தேவயானி எல்லா ஹீரோக்களுக்கும் பொருந்தும் பொருத்தமான அழகான, பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தார். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் தேவயானி குழந்தை போன்ற குணம் கொண்டு கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.

devayani - Aupdatenews360AC

தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

devyani - update news 360

இந்நிலையில், தேவயானியின் மூத்த மகள் இனியா விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம். விஜயின் மகன் சஞ்சய் தான் இவருக்கு ஜோடியாகவும், நீ வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இனியாவின் தந்தையும் இயக்குனர் ராஜ்குமார் அடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Devayani - Updatenews360

நீ வருவாயா படத்தில் முதலில் அஜித் விஜய் இணைந்து நடிக்க இருந்ததாம். ஆனால் விஜய் நடிக்காமல் போக அந்த கதாபாத்திரத்தில் பார்த்திபன் மற்றும் அஜித் நடித்துக் கொடுத்தார்களாம். இந்நிலையில், முதல் பாகத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதால் நீ வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திலாவது அவரது மகனை நடிக்க வைக்க வேண்டும் என்று விஜய்யிடம் நேரடியாக கேட்கப் போவதாகவும், இயக்குனர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

devayani -updatenews360

நீ வருவாயா இரண்டாம் பாகம் ரெடியாகிவிட்டதாகவும், தற்போது வரை 10 பேரிடம் கதையை கூறி விட்டதாகவும், மேலும் விஜய் மகன் ஒரு கேரக்டரிலும் மற்றொரு கேரக்டரில் இயக்குனர் விக்ரம் மகன் கனிஷ்கா விக்ரம் என்றும் உறுதியாக இயக்குனர் ராஜகுமாரன் சொல்லியுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?