என்னமோ செய்யறான்னு மட்டும் தெரியுது.. ஆனா, வெங்கட் பிரபு குறித்து பேசிய விஜய்..!

Author: Vignesh
2 August 2024, 1:00 pm

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’- படத்தின் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழி ஆன ஐஸ்வர்யா தனது பிறந்த நாளின் போது படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விஜய் சாரை பார்த்தேன்.

அப்போது, அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் சாரிடம் வெங்கட் பிரபுவுடன் வேலை செய்வது எப்படி என கேள்வியை கேட்டேன் அதற்கு அவர், ஒரு படத்தில் கமிட் ஆனால், ஒருவருடன் அவ்வளவு எளிதாக சிங்க் ஆக மாட்டேன்.

ஆனால், வெங்கட்பிரவுடன் சீக்கிரமே சிங்க் ஆகிவிட்டேன். அவரு செம கிங்.. செம கிங்.. என்னமோ செய்யறாருன்னு மட்டும் தெரியுது ஆனால், எப்படின்னு தெரியல… ஆனால், எனக்கும் வெங்கட் பிரபுவுக்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய படமாய் இருக்குன்னு தோணுது, இரு பேமிலி ஆக்சன் என்று படமாக இருக்கும் என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களை வெங்கட் பிரபு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் மூன்றாவது பாடல் நாளை ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிடப்படும் என பட குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த பாடல் தொடர்பாக இன்று ஒரு அப்டேட் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!