முற்போக்கு கருத்துக்களுடன் ஒரு வழியாக பாக்கியலட்சுமிக்கு End Card போட்ட விஜய் டிவி? 

Author: Prasad
8 August 2025, 12:53 pm

இல்லத்தரசிகளின் போராட்டம்

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட சீரீயலான பாக்கியலட்சுமி இன்றுடன் முடிவுக்கு வந்தது. பாக்கியலட்சுமி என்ற குடும்ப பெண்ணின் போராட்டங்களே இத்தொடரின் மையக்கரு. தனது கணவன் கோபியால் எப்போதும் அவமானப்படுத்தப்படுகிறார் பாக்கியலட்சுமி. ஆனால் தனது கணவன் கோபி தனது பழைய காதலியான ராதிகாவுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துகொண்டு வெகுண்டெழுகிறார். அதன் பின் பாக்கியலட்சுமி தனது உரிமைகளுக்காகவும் சுய மரியாதைக்காகவும் போராடுகிறார். 

Vijay tv Baakiyalakshmi serial  last episode today 

கிட்டத்தட்ட 5 வருடங்களாக இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரீயலாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது பாக்கியலட்சுமி. இந்த நிலையில் இன்றோடு இந்த சீரியல் நிறைவு பகுதியை எட்டியுள்ளது. 

கடைசி எபிசோட்

இன்று ஒளிபரப்பப்பட்ட கடைசி எபிசோடில் ஆகாஷுக்கும் இனியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அது மட்டுமல்லாது கோபி இனிமேல் தன்னை பற்றி யோசிக்கப்போவது இல்லை எனவும் இனி குழந்தைகளுக்காகவே வாழப்போவதாகவும் கூறினார். 

கணவன் மனைவியாக இல்லாமல் குழந்தைகளுக்கு வெறும் பெற்றோராக இருக்க முடிவு செய்தனர் கோபி-பாக்யா தம்பதியினர். ஆகாஷ் இனியா திருமணத்திற்கு ராதிகா தனது குழந்தையுடன் வந்திருந்தார். திருமணம் முடிந்தபிறகு ராதிகா தனது குழந்தையுடன் பெங்களுர் செல்வதாக கூறுகிறார். 

இறுதியில் ஒவ்வொருவருக்கும் வாய்ஸ் ஓவர் கொடுக்கப்படுகிறது. தனது வாழ்க்கையின் அனுபவங்களையும் அதனால் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் அக்கதாபாத்திரங்கள் பேசுகின்றன. கோபி, “பாக்யாவை நான் சரியாக புரிந்துகொள்ளவே இல்லை. அவளை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தேன். ஆனால் அவள் என் வீட்டில் நல்ல மருமகளாக இருந்தாள். இந்த சமயத்தில் ராதிகாவை சந்தித்தேன். ஆனால் அவளுக்கும் என்னால் சந்தோஷத்தை கொடுக்க முடியவில்லை. இனிமேல் எனது பிள்ளைகளுக்கு ஒருவரிடம் எப்படி மரியாதையுடன் நடந்துகொள்ளவேண்டும் எப்படி ஒருவரை  புரிந்துகொள்ளவேண்டும் என்பதை குறித்து சொல்லி தருவேன்” என பேசுகிறார். 

Vijay tv Baakiyalakshmi serial  last episode today 

அதன் பின் ராதிகா, “நமது வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை நாம் தான் சரி செய்துகொள்ள வேண்டும். என் பெண்ணுக்கு பொருளாதார ரீதியாக Independent ஆக இருப்பது பற்றி சொல்லித்தருவேன். அவள் யாரை காதலித்தாலும் திருமணம் செய்துகொண்டாலும் பொருளாதார ரீதியாக ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என சொல்லித்தருவேன்” என கூறுகிறார். 

அதன் பின் பாக்கியலட்சுமி பேசும்போது, “இந்த பிரச்சனை எல்லாம் நடந்ததுனாலதான் எனக்குள்ள இருக்குற பாக்யாவை வெளிய கொண்டு வர முடிந்தது. ஒரு பெண்ணுக்கு முயற்சியும் தன்னம்பிக்கையும் ரொம்ப முக்கியம். யார் என்ன சொன்னாலும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருங்க” என கூறுகிறாள். இவ்வாறு பாக்கியலட்சுமி சீரீயலுக்கு End Card போடப்படுகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!