இனிதே முடிந்த நாஞ்சில் விஜயன் திருமணம் – மணப்பெண் யாருன்னு பாருங்க!

Author: Shree
4 September 2023, 10:43 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் தனது கெரியரை ஆரம்பித்து பின்னர் கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக இவர் ராமருடன் பெண் வேடமிட்டு நடித்த காமெடி காட்சிகள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் ராமர் உடன் சேர்ந்து ’சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை’ போன்ற காமெடி எபிசோடு பட்டி தொட்டி எங்கும் படூப்பர் ஹிட் அடித்தது. இன்றளவும் இந்த காமெடிக்கு மிகப்பெரிய மவுஸ் இருக்கிறது. மேலும், லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே கெட்டப்பில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது.

தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஷகிலா உடனான நேர்காணலில், ஏன் இப்போது விஜய் டிவியில் வருவதில்லை என்ற கேள்விக்கு, பதிலளித்த நாஞ்சில் விஜயன் வேற டீம் மாறிடுச்சு. இப்போதுள்ள புதிய டீம் அவர்களுக்கு தெரிந்த நண்பர்களை மட்டும் தான் உள்ளே நுழைத்து வாய்ப்பு கொடுப்பார்கள்.

நான் இன்னுமும் நிகழ்ச்சி தொகுப்பாளர் , தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து வாய்ப்புகள் கேட்டுத்தான் வருகிறேன். ஆனாலும் கிடைக்கவில்லை. நான் ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளுக்கு ஆடியன்ஸை அழைத்து வரும் வேளையில் இருந்தேன் அப்படித்தான் புகழ் மற்றும் பாலா என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தார்கள் இப்போ நானே வாய்ப்பில்லாமல் தவிக்கிறேன் என வருந்தினார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் அறிமுகம் ஆன மரியா என்ற பெண்ணை தான் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதையடுத்து நாஞ்சில் விஜயனுக்கு பலர் திருமண வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது நாஞ்சில் விஜயனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இருந்தாலும் மணப்பெண்ணின் முகத்தை அவர் காட்டவில்லை. விரைவில் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகலாம்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?